போலீசார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட கோட்ட ரயில்வே சிறப்பு பிரிவு தனிப்படை போலீசார் சேலத்தில் இருந்து காட்பாடி வரை செல்லும் ரயில்களில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்த பொழுது ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்த பொழுது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகம் படும்படியாக இருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரசாஹு என கூறினார்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த பொழுது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது. அந்த கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் இருந்து ஈரோடு பகுதிக்கு கடத்தியதாக அந்த இளைஞர் கூறியதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தார்கள்.