Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ் அடித்ததால்…. மனமுடைந்து துப்புரவு பணியாளர் தற்கொலை…. மதுரையில் சோகம்…!!

திருட்டு வழக்கில் காவல்துறையினர் அடித்ததால் மனமுடைந்து துப்புரவு பணியாளர் தூக்கிட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த வாரம் ஒரு வீட்டில் 150 பவுன் நகை மற்றும் 6 லட்சம் பணம் திருடு போயுள்ளது. இந்த வழக்கை சுப்ரமணியபுரம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு தொடர்பாக திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்(43) என்ற துப்புரவுப் பணியாளரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து கண்ணன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமியை விசாரணைக்காகக் காவல் நிலையம் வரச் சொல்லியுள்ளனர். கண்ணன் தனது மனைவியை முன்னே செல்லும்படியும் தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தனலட்சுமி வீட்டிலிருந்து பேருந்து நிலையம் சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்தும் கண்ணன் வராத காரணத்தால் வீட்டுக்கு வந்து பார்த்த தனலட்சுமிக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அங்கு கண்ணன் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |