Categories
மாநில செய்திகள்

போலீஸ் அடிப்பது மனித உரிமை மீறல்…. ஓபிஎஸ் சீற்றம்….!!!!

சேலத்தில் காவலர்கள் தாக்கியதில் வியாபாரி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  தமிழகத்தில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரேனும் தவறு செய்திருந்தால் போலீசார் ஆதாரங்களை திரட்டி சட்டப் படி தண்டனை பெற்றுத்தர வேண்டும். காவல்துறையினரே தாக்குதல் நடத்துவது என்பது மனித உரிமையை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |