பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள அஷ்கிலொன் என்ற நகரில் கட்டிட வேலை நடைபெறும் பகுதியில் பணிபுரியும் பாலஸ்தீனர்களின் அடையாள அட்டைகளை சோதிப்பதற்காக இஸ்ரேல் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது இஸ்ரேல் போலீஸ் அதிகாரி மீது அங்கிருந்து பாலஸ்தீனியர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த போலீஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பாலஸ்தீனியர் மீது சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் இஸ்ரேல் காவல்துறை அதிகாரி பலத்த காயமடைந்துள்ளார். அதே சமயம் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் போலீஸ் சுட்டதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.