சட்ட விரோதமாக செம்மண் அள்ளிய 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 2 லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு அருகே உள்ள கருங்குளம் கண்மாய் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக செம்மண் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து 2 லாரிகளிலும் அனுமதி சீட்டு இல்லாமல் செம்மண் அள்ளியது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அனுமதியின்றி செம்மண் அள்ளிய குற்றத்திற்காக பள்ளபட்டியை சேர்ந்த இளையராஜா, சதீஸ்குமார், ஆண்டிச்சாமி, கணேசபுரத்தை சேர்ந்த ஹரிராம் ஆகிய 4 பேரை கைது செய்து மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.