Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய சகோதரர்கள்… நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்…!!

நாட்டு வெடுகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த  சகோதரர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் பாரதிநகர் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மொபட்டில் வந்த மூன்று பேரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் மொபட்டில் இருந்த 3 பேரும் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மொபைல் விரட்டி சென்று நாகநாதபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் நாகநாதபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது மீராசா என்பவரது மகன்கள் நியாஸ்கான், முகம்மது ரிபாயுன், முகம்மது ஜகாங்கீர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் வந்த மொபட்டை சோதனை செய்தபோது 3 நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது, எந்த நோக்கத்திற்காக வைத்து இருந்தார்கள் எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |