நீண்ட கூர்வாளை மறைத்து வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் காவல்துறையினர் அரண்மனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பள்ளி மைதானம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதனைபார்த்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் நீண்ட கூர்வாள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்துள்ளனர்.