சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மொட்டனூத்து பகுதியில் ராஜதானி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மணல் அள்ளி சென்று கொண்டிருந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓடையில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணல் அள்ளிய காமட்சிபுரத்தை சேர்ந்த மணிமாறன், கதிர்நரசிங்காபுரத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் மணல் மற்றும் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.