சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து 20 சாரயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் ஒடப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஒடப்பள்ளி குப்பியண்ணன் கோவில் தெரு பகுதியில் ஒரு நபர் கேனுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னதம்பி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்ட் கேனில் 20 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் சின்னத்தம்பியை கைது செய்து 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.