Categories
மாநில செய்திகள்

போலீஸ் ஆகணுமா…??? அப்ப உடனே இத பண்ணுங்க….!! மிஸ் பண்ணிடாதீங்க…!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 444 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன . இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. 30 வயதிற்கு உட்பட்ட பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் தளர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022 என கூறப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணையதள பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதோடு இந்த தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடைபெற உள்ளன. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவர்கள் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு விசாரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |