புதுச்சேரியில் மதுபோதையில் காவலரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள கிரும்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தை போக்குவரத்து காவலர் சுபாஷ் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. தாறுமாறாக சென்ற அந்த வாகனத்தை பைக்கில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்று காவலர் சுபாஷ் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குடித்துவிட்டு மதுபோதையில் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற வாகன ஓட்டுனரை காவலர் சுபாஷ் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வாகன ஓட்டுனர் காவலர் சுபாஷின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற தோடு அவர் அணிந்திருந்த முக கவசத்தையும் பறித்து வீசியுள்ளார். இதில் போக்குவரத்து காவலர் சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டுநர் நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.