Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் எங்கள அடிச்சுட்டாங்க…. மனமுடைந்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு …. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தற்கொலைக்கு முயன்ற தம்பதியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் வட புதூர் பட்டியில் மாயன் என்பவர் அவரது மனைவி மகேஸ்வரிவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாயன் தாய்  ராசாத்தி கடந்த 22ஆம் தேதி இறந்ததையடுத்து அவரது இறுதி காரியம் நடக்கும்போது குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மாயனது தம்பி மனைவி காவல் நிலையத்திற்கு சென்று மாயன் மற்றும் மகேஸ்வரி மீது புகார் கொடுத்துள்ளார்.

இதனால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற தம்பதியரை போலீசார் தாக்கியிருக்கிறார்கள். இதனால் மன உளைச்சலடைந்த தம்பதியர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டனர். இதனைத் தொடர்ந்து தம்பதியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |