தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களிடம் ஏடிஎம் அட்டையை (ATM Card) புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி பேங்க் மேனேஜர் பேசுவதாக ஏடிஎம் கார்டு, Number,CVV Number, OTP ஆகியவற்றை கேட்டால் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.