Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போலீஸ் என்று கூறி… ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!!!

போலீஸ் என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூரில் வசித்து வருபவர் 32 வயதுடைய தினகர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் 26 வயதுடைய நிவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். இவர்கள் தற்சமயம் பூந்தமல்லியில் குடியிருந்து வருகிறார்கள். தனது கணவர் போலீஸ் என்று தெரிவித்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தினகரனை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் போன்று பொய்யான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த பொய்யான அடையாள அட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீஸ் வேலை வாங்கி கொடுப்பதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |