மண் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கால்களில் விழுந்து ஆதிவாசி மக்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் முதலை மடை பஞ்சாயத்து, பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதியில் செம்மனம்பதி ஆதிவாசி கிராமம் இருக்கின்றது. கேரளாவில் இருந்து அந்த கிராமத்திற்கு வரவேண்டும் என்றால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் அனைத்து வாகனங்களும் வர முடியும். மேலும் அந்த வனப் பகுதியில் சாலை வசதி இல்லாததால் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி தான் அனைவரும் செல்ல முடியும். அதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் தங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்தாலும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை.
எனவே அப்பகுதியில் இருந்து தேக்கடிக்கு எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு ஆதிவாசி தலைவர் ராமன் குட்டி தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியில் நேற்று ஆதிவாசி மக்கள் அனைவரும் ஈடுபட்டனர்.அதனை அறிந்த கேரள வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிர்ச்சி அடைந்த ஆதிவாசி மக்கள் அனைவரும் அதிகாரிகளின் காலில் விழுந்து, நாங்கள் யாரையும் நம்பவில்லை. எங்களுக்கான வசதியை நாங்களே ஏற்படுத்திக் கொள்ள அனுமதி அளியுங்கள்.
இந்த எட்டு கிலோ மீட்டர் சாலை அமைத்தால் 80 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி கதறி அழுதனர். அதனைக் கண்டு மனம் உருகிய அதிகாரிகள் அனைவரும் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி ஆட்சியர் கூறும்போது, “மண் சாலை அமைப்பதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. ஆனால் அதற்கு முறைப்படி அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இரண்டு மாதம் காத்திருந்தால், 100 நாள் வேலைத்திட்டத்தில், அப்பகுதி மக்களே சேர்ந்து சாலை அமைப்பதற்கான கூலியும் கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்கலாம்.