அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் வீட்டில் மண்ணுளிப்பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுவாமிநாதபுரத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் மண்ணில்தான் பதுக்கி வைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் அரவிந்தன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது அரவிந்தன் வீட்டில் இல்லாததால் பூட்டை உடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றனர். அந்த சோதனையில் மண்ணுளி பாம்பு இருந்தது தெரியவந்தது. இது 4 1/2 கிலோ எடையும் 4 அடி நீளமும் இருந்தது. இந்த பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர். மேலும் இந்த மண்ணுளி பாம்பில் மருத்துவ குணங்கள் உள்ளது எனக் கூறி சிலர் இதை அதிக விலைக்கு ஏமாற்றி விற்பார்கள்.