Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் செய்தது சரிதான்” விகாஸ் துபே மனைவி ஆதரவு ..!!

விகாஸ் துபே என்கவுண்டரில்  கொல்லப்பட்டது சரிதான் என்று அவரது மனைவி ரிச்சா துபே தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே நேற்று காலை என்கவுண்டரில்  கொல்லப்பட்டுள்ளார். விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் உத்தர பிரதேச எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விகாஸ் துபேயின் குடும்பத்தினர் அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விகாஸ் துபே  காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மிகச்சரியான செயல் என்று அவரது  தந்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபேவும், காவலரின் இத்தகைய நடவடிக்கை மிகச்சரியானதே என்று கூறியுள்ளார்.

விகாஸ் துபே மரணம் பற்றி ரிச்சா துபே கூறுகையில், “விகாஸ் துபே செய்தது மிகவும் தவறான செயல் இந்த மரணத்தை பெறுவதற்கு அவர் தகுதியானவரே” என்று அவர் கூறியுள்ளார். விகாஸ் துபேவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அவரது மனைவி ரிச்சா துபே அங்கு செய்தி தொகுப்பிற்காக வந்த ஊடகத்தினரை பார்த்து கோவமாக இங்கிருந்து செல்லுங்கள் என்றும் இந்த என்கவுண்டருக்கு நீங்களே தான் காரணம் எனவும் கூறி ஆவேசமாக பேசினார். விகாஸ் துபேயின் உடலானது நேற்று அவரது சொந்த கிராமத்தில் உள்ள  மின் மயனாத்தில் பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |