தமிழகத்தில் போலீஸ் துறைக்கு மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் டி.எஸ்.பி. அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.ஏ.எஸ். முதல் கான்ஸ்டபிள் வரை உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதற்கு உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஸ்டேஷன், ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் படை ஆகிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 14 டி.ஜே.பி. கள் மற்றும் 17 ஏ.டி.ஜி.பி.கள் உள்ளனர். மேலும் உயர் அதிகாரிகளின் பணி இடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் எஸ்.ஐ. முதல் கான்ஸ்டபிள் வரை உள்ள பணியிடங்கள் வருடம் வருடம் பற்றாக் குறையாக இருந்து வருகிறது.
இதையடுத்து 2021 ஜூலை கணக்கெடுப்பின்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்.ஐ. மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு வார விடுமுறை எடுக்க போலீஸ்களுக்கு அனுமதித்தும் ஆள் பற்றாக்குறையால் விடுமுறை எடுக்க முடியவில்லை. இதனால் தமிழக அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.