உத்திரப்பிரதேசத்தில் போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெறவேண்டும் என்று கூறி முதியவர் ஒருவரை கோப்பையில் சிறுநீர் குடிக்கச் சொல்லி ஒரு நபர் துன்புறுத்தியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் லலித்பூர் பகுதியில் உள்ள ரோடா என்ற கிராமத்தில் 65 வயது தலித் இன முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் இருக்கும் சோனி யாதவ் என்பவர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கூறிய சோனு, தனது சிறுநீரை ஒரு கோப்பையில் ஊற்றி அதனை முதியவரை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கே முதியவர் மறுப்பு தெரிவித்ததால் சோனு கம்புகளை கொண்டு அவரை பலமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதியவர் கூறுகையில், “கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது மகனை, சோனு கோடாலியால் பலமாக தாக்கினார்.
அதனால் நான் போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால் சோறு புகாரை திரும்பப் பெற்று இருவரும் சமரசம் செய்து கொள்ளலாம் என்று எங்களை வற்புறுத்தி வந்தார். தற்போது என்னை தனியாக அழைத்துச் சென்று துன்புறுத்தினார்”என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “அதிகாரத்தில் இருக்கும் சிலர் ரோடா கிராமவாசிகள் இரண்டு பேரை தாக்கியுள்ளனர். அதனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளை கைது செய்துவிட்டோம். இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம். இது போன்ற சம்பவங்களை நாங்கள் சகித்துக் கொள்வதில்லை”என்று அவர் கூறியுள்ளார்.