வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு நேரம் இல்லா நேரத்தில் வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி , ஐயூஎம்எல் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இந்த விவகாரம் தொடர்பாக பேசினர். அவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்திருந்தார்கள்.
இதற்க்கு பதிலளித்து பேசிய முதல்வர் , கடந்த 14ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அருகே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுமார் 200 பேர் கோஷம் எழுப்பினர். சென்னை காவல் ஆணையர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து செய்ய வலியுறுத்தினார். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறை போராட்டக்காரர்களிடம் அறிவுரை வழங்கினர். காவல்துறை அறிவுறுத்திய பிறகும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது காவல்துறையினர் மீது கல் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில் போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தி பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் சிலர் தூண்டிவிட்டு காவல்துறையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் நடைபெற்ற தெருவிலிருந்து 6வது தெரு தள்ளி ஒரு 70 வயது முதியவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் . 70 வயது முதியவர் போராட்டத்தின் போது உயிர் இழந்ததாக சிலர் வதந்தி பரப்பினர்.