ஊழல் புகார் விவகாரத்தில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து தர வேண்டும் என காவல் துறையினரை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மும்பை முன்னாள் காவல் ஆணையர் திரு. பரம்பீர்சின் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணைக்கு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பியுள்ள தேஷ்முக் தார்மிக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.