ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் ராஜ்குந்த்ரா விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு ஆய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது ராஜ்குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான சில்பா செட்டி ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அவரிடம் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர், போலீஸ் விசாரணையின்போது ஆபாச படம் தயாரித்த விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார். விசாரணையின் போது தனது கணவர் ராஜ்குந்த்ராவை கடுமையாக திட்டியதாகவும், தன்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் இத்தனை ஆண்டுகளாக நான் சம்பாதித்த பெயரும் புகழும் பாதாளத்துக்கு சென்று விட்டதாக கூறி அவர் கதறி அழுததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.