செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், பிஜேபியின் சார்பாக பால் கனகராஜ், மற்றும் மாநில பொது செயலாளர் கருணாகரன், மாநில துணைத் தலைவர் வீ.பி துரைசாமி, சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாங்க எல்லாம் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுக்கிறோம், தேர்தல் முறையாக நடத்த வேண்டும் வெளிமாநில பார்வையாளர் போடவேண்டும், தேவைப்பட்டால் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கோரிக்கை விடுக்கிறோம்.
ஏனென்றால் சமீபத்தில் அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், 100% வெற்றி அடைய வேண்டும் என்று சொல்கிறார். எப்படி ஜனநாயகத்தில் 100% வெற்றி அடைய முடியும். அவரே காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் அவர்கள் நேரடியாகவே அறிவுரை வழங்கியுள்ளார். எல்லாருமே வந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சி ஆணையர் எல்லாம் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றார்கள்.
2006ல் செய்த மாதிரி 7ல் இருந்து 9க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று, அந்த மாதிரி தேர்தல் நடக்க விடமாட்டோம். சென்னையை பொருத்தவரையில் இந்த மாதிரி 97 வார்டுகளில் மறுதேர்தல் 2006ல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் உத்தரவு வாங்கினோம். நாங்களும் நீதிமன்றத்திற்கு செல்வோம், தேவைப்பட்டால் மாநில தேர்தல் ஆணையரை கவர்னரும் தான் நியமித்திருக்கிறார்கள். நாங்கள் மனு கொடுப்போம், எங்களை போன்ற பாரதிய ஜனதா கட்சி அனைத்திற்கும் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.