அமெரிக்காவில் உள்ள யூஜின் நகரில் 18-ஆவது உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இன்று போல்வால்ட் பந்தயம் நடைபெற்றது. இதில் ஸ்வீடன் வீரர் அர்மன்ட் டுப் லான்ட்ஸ் 6.21 மீட்டர் தாண்டி உலக சாதனை படைத்து வெற்றிபெற்றார். அதன் பிறகு அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் நீல்சன் 5.94 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கமும், பிலிப்பைன்ஸ் வீரர் எர்சைட் 5.94 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
இதனையடுத்து பெண்களுக்கான 4×400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா தங்கப்பதக்கமும், ஜமைக்கா வெள்ளி பதக்கமும், ஜெர்மனி வெண்கல பதக்கமும் வென்றது. மேலும் அமெரிக்கா 11 வெண்கல பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 13 தங்கப்பதக்கங்களை வென்று முதல் இடத்தை பிடித்துள்ளது.