போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் நடிகர், இசையமைப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி. இவர் தற்பொழுது சுசீந்தரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தாய் சரவணன் தயாரிக்கின்றார். படத்திற்கு வள்ளிமயில் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.
அண்மையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்டனி பகிர்ந்து அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை கூறியுள்ளார். தற்போது இந்த போஸ்டரானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
— vijayantony (@vijayantony) October 4, 2022