Categories
அரசியல் மாநில செய்திகள்

போஸ்டர் ஒட்டிய நிர்வாகி… அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…!!!

நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணியம் ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சுப்பிரமணிய ராஜா நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |