சென்னை முழுவதிலும் விஜய் ரசிகர்கள் நன்றி முதல்வரே என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால், திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜயின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் 100 சதவீத திரையரங்குகளை திறக்கலாம் என்று அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை முழுவதிலும் விஜய் ரசிகர்கள் “நன்றி முதல்வரே” என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பி உள்ளனர். திரையரங்கு திறந்தால் கொரோனா பரவல் அதிகமாகும் என்று மருத்துவர்கள் வேதனைப்படும் நிலையில், விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவது வேதனை அளிக்கிறது.