Categories
டெக்னாலஜி

போஸ்ட்பெயிட் சலுகை பலன்களை….. சத்தமின்றி மாற்றிய ஏர்டெல்…. வெளியான தகவல்….!!!!

போஸ்ட்பெயிட்  சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் மாற்றி அமைத்து வருகிறது.

ஏர்டெல் நிறுவனமானது தனது அமேசான் ப்ரைம்சந்தா வேலிடிட்டியை ஒரு வருடத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு குறைத்து விட்டது. இருப்பினும் இந்த நடவடிக்கை ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையில் வழங்கும் வேலிடிட்டி தானாக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்புகளில் அமேசான் பிரைம் சந்தா ரூ. 499, ரூ. 999, ரூ. 1, 199 மற்றும் ரூ. 1,599 போன்ற இணைப்புகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் இணைப்பு களுடனும் அமேசன் பிரைம் சந்தாவை வழங்கிவருகின்றது. இதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. புதிய அறிவிப்பின் படி போன்ற ரூ. 499, ரூ. 999, ரூ. 1, 199 மற்றும் ரூ. 1,599 போன்ற பிளான் ஆறு மாதங்களுக்கான அமேசான் ப்ரைம் சந்தா வழங்கப்பட்டு வருகின்றது. இது  ஏர்டெல் தேங்ஸ் பிளாட்டினம் ரிவார்ட்ஸ்  பெயரில் வழங்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது என ஏர்டெல் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்தில் தெரிவித்துள்ளது. அந்த வகையில்ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயன்படுத்துவோர், இந்த சலுகைகளை பயன்படுத்தி வந்தால், ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா தொடர்ந்து வழங்கப்படும்.

Categories

Tech |