Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர திட்டத்தில்…. 5 வருடத்தில் நல்ல வருமானம்…. உடனே ஜாய்ன் பண்ணுங்க…!!

பணம் அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வகையில் சேமித்து வைக்க வேண்டும் அது தான் ரொம்ப முக்கியம். நாம் நன்றாக இருக்கும்  காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு பணத்தின் சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு நன்றாகவே புரிந்திருக்கும். இதற்கு இந்திய தபால் துறை சிறப்பான சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

அதில் ஒன்று தான் போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டமானது வங்கியில் நிலையான வைப்பு தொகை வைப்பதை போல நல்ல லாபத்தை கொடுக்கும். 5 வருடங்களில் நல்ல  வருமானம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்துக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 6.6 சதவீதம் கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 4.5 லட்சம் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் 5 வருங்டகளுக்கு பணத்தை சேமிக்க முடியும். 5 வருடங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபமாக கிடைக்கும். ஐந்து வருடங்கள் கழித்து தான் அசல் தொகை நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் 5 ஆண்டுகளுக்கு முன்னரே சேர்ந்து கணக்கை மூட வேண்டும் என்றால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும்.

Categories

Tech |