இந்திய அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தற்போது வங்கிகளை காட்டிலும் அஞ்சலகம் சேமிப்பு திட்டத்தில் ஏராளமானோர் தங்கள் முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் குறைந்த நாட்களில் அதிகமான லாபத்தை பெற முடிகிறது. இது மத்திய அரசின் கீழ் இயங்கி வருவதால் 100 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் ஆபத்து இல்லாத முதலீடாகவும் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் 10 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகள் வரையிலும் இந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். ஆனால் இத்திட்டத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை கொண்ட பெற்றோர் மட்டுமே இணைய முடியும். இந்த திட்டத்தில் ரூபாய் 2,500 தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்தி வந்தால் முதிர்வு காலம் முடியும்போது 12,00,000 லட்ச ரூபாய் வரை பெற முடியும். இதில் குறைந்தபட்சம் ரூபாய் 250 முதல் பிரீமியம் தொகையை செலுத்தலாம்.
இந்த திட்டத்தில் இணைவதற்கு SSA 1 படிவத்தில் குழந்தையின் பெயர், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் போன்றவை கட்டாயமாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அந்த குழந்தையின் பெற்றோர் (அல்லது) பாதுகாவலரின் முகவரி சான்றுக்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பயன்பாட்டு பில் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அடையாள சான்றாக பான், வாக்காளர் அட்டை, ஆதார் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.