Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் முதலீடு பண்ண போறீங்களா?…. அப்போது இதை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!!!

போஸ்ட் ஆபீஸில் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும்தான் வரிச்சலுகையானது கிடைக்கும். அதன்படி, PPF ஆனது வரிசேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் EEE பிரிவின் கீழ் வருகிறது. ஒரு முதலீட்டாளர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கணக்கைத் திறந்து ரூபாய் 1.5 லட்சம் வரை PPF இல் முதலீடு செய்யலாம். அத்துடன் வருமானவரிச் சட்டத்தின் 80Cன் முதலீட்டுத் தொகையில் விலக்குகளைப் பெறலாம். PPF மீதான வட்டி மற்றும் முதிர்வுத்தொகையும் வரி விலக்கு உண்டு.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் (அல்லது) சட்டப்பூர்வ பாதுகாவலர் தபால் அலுவலகத்தில் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கைத் திறந்து, ஒரு நிதி ஆண்டில் ரூபாய்1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் மற்றும் முதலீட்டுத் தொகையில் 80Cல் விலக்குகளைப் பெறலாம். PPF போன்றே வரி இல்லாத வட்டி மற்றும் முதிர்ச்சியுடன் SSY ஆனது EEE அம்சங்களையும் கொண்டுள்ளது.

தேசிய பென்சன் திட்டம்

NPS சேவை வழங்குநர்களுக்கு அஞ்சல் அலுவலகம் POP (இருப்புபுள்ளி) ஆக செயல்படுகிறது. ஆகவே என்.பி.எஸ்-ல் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் ஒரு கணக்கைத் திறக்க நியமிக்கப்பட்ட தபால் அலுவலகக் கிளைக்குச் செல்லலாம். NPS அடுக்கு-1 கணக்குகளில் தன்னார்வ முதலீடுகளுக்காக முதலீட்டாளர்கள் 80CCD(1B) நிதி ஆண்டில் ரூபாய்.50,000 வரை விலக்கு கோரலாம். என்.பி.எஸ்-ன் கீழ் ரிட்டயர் மென்ட் கார்பஸிலிருந்து வரும் வருமானம் மற்றும் மொத்த தொகை மாற்றங்களுக்கு வரியில்லை.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு

அஞ்சல் அலுவலக சேமிப்புக்கணக்குகளில் வைப்புத் தொகைக்கு வரிச்சேமிப்புப் பலன்கள் இல்லை. வட்டிகளுக்கு வரி விலக்குகள் இல்லை. அதே சமயம் வருமானவரிச் சட்டத்தின் u/s 10(15)(i) இல் உள்ள ரூபாய். 10,000 விலக்குகளைத் தவிர்த்து முதலீட்டாளர்கள் டனின் கணக்குகளில் ரூபாய். 3,500 மற்றும் கூட்டுக்கணக்குகளில் ரூபாய். 7,000 வரை ஈட்டப்படும் வட்டிக்கு வரிவிலக்குகளைப் பெறலாம். அஞ்சலக சேமிப்புக்கணக்குகளில் பெறப்படும் வட்டிகள் TDS-க்கு உட்பட்டவை அல்ல. அத்துடன் வரி செலுத்துவோர் தங்களது ITR-களில் பெற்ற வட்டியை அறிவிக்க வேண்டும்.

மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்தகுடிமக்கள் முதலீட்டாளர்கள் ஒரு நிதி ஆண்டில் அஞ்சல் அலுவலக SCSSல் செய்யப்படும் முதலீடுகளுக்கு ரூபாய். 1.5 லட்சம் u/s 80C வரை வரி-பயன்களைப் பெறுகிறார்கள். SCSS இல் பெறப்படும் வட்டிக்கு வரிவிலக்கு இல்லை என்றாலும், முதலீட்டாளர்கள் 80TTB நிதி ஆண்டில் சம்பாதித்த வட்டியில் ரூபாய். 50,000 வரை விலக்குகளைப் பெறுவார்கள்.

Categories

Tech |