Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்: வட்டி விகிதம் பற்றி உங்களுக்கு தெரியுமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

தபால் அலுவலக சேமிப்புத்திட்டத்தில் குறைவான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட இயலும். போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தபடியே  நல்ல லாபத்தை ஈட்டலாம். அரசாங்கம் வட்டிவிகிதத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறது. அஞ்சல் அலுவலகங்கள், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, தபால் அலுவலக மாதாந்திர வருமானக்கணக்கு போன்றவற்றில் 2 மற்றும் 3 வருட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, இவற்றில் வருமானவரி விலக்கு அளிக்கப்படும். அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இந்திய அஞ்சல் துறையின் திட்டங்கள் அரசின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.

அவை மிகவும் பாதுகாப்பானவை ஆகும். இது தவிர்த்து அவற்றில் முதலீடு செய்வது வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கிறது. முன்பாக 2021-22 முதல் காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டது. இந்நிலையில் இத்திட்டங்களுக்குரிய வட்டியை அரசு குறைத்து இருந்தது. இந்த முறை வட்டிவிகிதங்களானது அதிகரிக்கப்பட்டு உள்ளது. புது கட்டணங்கள் அக்டோபர் 1, 2022 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இத்திட்டத்தின் முதிர்வுகாலம் மற்றும் வட்டி இரண்டையும் மத்திய அரசு மாற்றியமைத்து இருக்கிறது. முன்னதாக இத்திட்டத்தின் முதிர்வுகாலம் 124 மாதங்களாக இருந்த சூழ்நிலையில், இப்போது அது 123 மாதங்களாகக் குறைக்கப்பட்டு உள்ளது. வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்பட்டு, முன் இருந்த 6.9 சதவீதத்திலிருந்து இப்போது 7 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

# அஞ்சல் அலுவலகத்தின் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், தற்போது 7.4 சதவீதத்துக்கு  பதில் 7.6 % வட்டி கிடைக்கும்.

# தபால் அலுவலக மாதாந்திர வருமானத்திட்டம் தற்போது 6.7% வட்டியைப் பெறுகிறது. முன்னதாக 6.6 சதவீதம் ஆக இருந்தது. இவை 10 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

# சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்றவற்றின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை.

# 2 வருட நிலையான வைப்புத் தொகைக்கான தபால் அலுவலக வட்டி 20 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது வட்டிவிகிதம் 5.7 சதவீதமாகி விட்டது. இதற்கு முன் 5.5 % வட்டி கிடைத்து வந்தது.

# தபால் அலுவலக 3 ஆண்டு நிலையான வைப்பு 30 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. இதற்குரிய வட்டி 5.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

Categories

Tech |