மக்கள் பல பேரும் பணத்தை பாதுகாப்பான இடங்களில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். அத்துடன் முதலீடு செய்யும் தொகைக்கு சிறந்த வருமானம் பெறவேண்டும் என்பது அவர்களின் முதன்மையான விருப்பமாக இருக்கிறது. அவ்வாறு பொதுமக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய முதலீட்டு திட்டங்கள் பிற இடங்களை விட போஸ்ட் ஆபீஸ்தான் வழங்குகிறது. இவற்றில் முதலீடு செய்வதன் வாயிலாக சிறந்த வட்டி விகிதத்துடன்கூடிய வருமானம் மற்றும் பாதுகாப்பை பெற இயலும். பல்வேறு வகையான சிறுசேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது.
இவை ஏழை-எளிய மக்களுக்கு சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் விளங்குகிறது. தற்போது போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் பிஓஎம்ஐஎஸ் திட்டமானது முதலீட்டாளருக்கு சிறந்த பலனை தருகிறது. போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத்திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) வருடத்திற்கு 6.7 % வட்டிவிகிதத்தை வழங்குகிறது. இது 5 ஆண்டு லாக்-இன் காலத்துடன் வருகிறது. அத்துடன் இவற்றில் தனிநபரின் அதிகபட்சம் முதலீடு வரம்பு ரூபாய்.4.5 லட்சமாகவும், கூட்டுக்கணக்கின் அதிகபட்சமான முதலீட்டு வரம்பு ரூபாய்.9 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கணக்கு திறக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதம் முடிந்ததும் மற்றும் முதிர்வுவரை வட்டி செலுத்தப்படும்.
டெபாசிட் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள்ளாக எந்த டெபாசிட்டும் வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக போஸ்ட் ஆபிசின் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்குப் பின் மற்றும் கணக்கு திறக்கப்பட்ட நாளில் இருந்து 3 வருடங்களுக்கு முன் ஒரு கணக்கு மூடப்பட்டால் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையில் இருந்து 2 சதவீதம் கழிக்கப்பட்டு மீதம் உள்ள தொகை வழங்கப்படும் என போஸ்ட் ஆபீஸ் தெரிவித்து இருக்கிறது.
அதே நேரம் கணக்கு முதிர்வின்போது போஸ்ட் ஆபிசில் பாஸ்புக்குடன் சேர்த்து விண்ணப்பத்தை சமர்ப்பித்து கணக்கை மூடவேண்டும். அஞ்சல் அலுவலக மாத வருமானம் திட்டத்தில் 5 வருடங்களுக்கு ரூபாய்.4,50,000 முதலீடு செய்தால், மாத ஓய்வூதியம் (அ) ரூ.2,512 (அ) ஆண்டுக்கு ரூபாய்.30,144 வருமானம் கிடைக்கும். 5 வருடங்களுக்கு பின் கணக்கின் முதிர்ச்சியில் உங்களுக்கு ரூபாய்.4.5 லட்சம் கிடைக்கும். இது அனைத்தையும் சேர்த்து மொத்தம் உங்களுக்கு ரூபாய்.6,00,720 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.