Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள் பணத்தை சேமித்து வைக்கவேண்டியது அவசியமாகும். முதலீட்டு திட்டங்களில் சிறுகசிறுக பணத்தை சேமித்து வைத்தால் வட்டியுடன் சேர்த்து நமக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். இதற்காக தபால் அலுவலகம் வழங்கும் சுகன்யாசம்ரித்தி திட்டம் இருக்கிறது. இவற்றில் சிறியளவில் சேமிப்பை துவங்கி பெரியளவில் லாபத்தை பெறலாம். இத்திட்டத்தில் முழுமையான விபரத்தை பின்வருமாறு காண்போம்.

சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு வெறும் ரூபாய்.250 முதலீடு செய்து கணக்கைத் துவங்கலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் கணக்கில் செலுத்தக்கூடிய அதிகபட்சம் தொகை ரூபாய்.1.5 லட்சம் ஆகும். திட்டத்தின் துவக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சம் தொகையை நீங்கள் டெபாசிட் செய்யவில்லை எனில் அடுத்த மாதம் உங்களுக்கு ரூபாய்.50 அபராதம் விதிக்கப்படும்.

வட்டி விகிதம் 

சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் உங்களது முதலீட்டிற்கு 7.6 சதவீதம் வருமானம் கிடைக்கிறது. எனினும் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் வட்டி ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆனால் 7 சதவீதத்திற்கு கீழ் குறையாது.

கணக்கு துவங்கும் செயல்முறை

உங்களது பெண்குழந்தை 10 வயதுக்கு உட்பட்ட மைனர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் கணக்கைத் திறக்கலாம். அத்துடன் கணக்கு உங்களது மகளின் பெயருடன் திறக்கப்பட வேண்டும். ஒரே வீட்டில் 2 மகள்களுக்கு திறக்கலாம்.

பணத்தை எடுக்கும் விபரம்

உங்களது மகளுக்கு 18 வயதாகும் போது கணக்கில் சேமிக்கப்பட்ட தொகையை திரும்பப்பெறலாம். 18 வயதாவதற்கு முன்பு  பணத்தை எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 21 வயதை அடையும்போது கணக்கு முதிர்ச்சி அடைகிறது. அதுவே எதிர்பாராத வகையில் கணக்கின் முதிர்ச்சிக்கு முன்பு உங்களது மகள் இறந்துவிட்டால் கணக்கு மூடப்பட்டு மொத்த தொகையானது பெற்றோர் (அல்லது) பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படும்.

Categories

Tech |