தபால் நிலையங்கள் வாயிலாக நாட்டுமக்கள் அதிகமான பலன்களை அடையும் அடிப்படையில் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனிடையில் மத்திய அரசு மிகவும் பாதுகாப்பாக நம் முதலீடு தொகையை நிர்வகித்து வருகிறது. நடுத்தர மக்கள் மிககுறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி மக்கள் அஞ்சல் அலுவலகத்தை தவிர பிற வழிகளில் வருகின்றனர். அதாவது சேமிப்பு திட்டம், முதலீடு, பிக்சட் டெபாசிட் என்று அஞ்சல் சேமிப்பில் உள்ள பல திட்டங்களும் அதிக லாபம் மற்றும் வட்டியை மக்களுக்கு வழங்கும் அடிப்படையில் இருக்கிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
அஞ்சல் நிலையத்தில் சேமிப்புத் திட்டங்களில் அதிகமான வட்டியை தருவது சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் ஆகும். பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தொங்கப்பட்ட இத்திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எளிதாக பணத்தை இரட்டிப்பாக்க இத்திட்டத்தை தான் பலரும் தேர்வு செய்கின்றனர். அத்துடன் இத்திட்டத்தில் நம் முதலீட்டு தொகை 9.47 வருடங்களில் இரட்டிப்பாக மாறிவிடும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
முதியவர்களின் நலனுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் தொடங்கப்பட்டது. மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 9.73 வருடங்களில் நம் முதலீடு இத்திட்டத்தில் இரட்டிப்பாக மாறிவிடும்.
PPF திட்டம்
பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 ஆகும். இத்திட்டத்தில் உங்களது பணம் 10.14 வருடங்களில் இரட்டிப்பாகிவிடும். அதிகளவிலான பொதுமக்கள் தேர்வு செய்யும் திட்டமாக இது இருக்கிறது.
மாத வருமானத் திட்டம்
மாத வருமானத்திட்டத்தில் உங்களது பணம் 10.91 வருடங்களில் இரட்டிப்பாகும். இதையடுத்து மாத வருமானத் திட்டத்தின் வட்டி விகிதம் 6.6 ஆகும்.
தேசிய சேமிப்பு திட்டம்
5 வருடங்களை முதிர்ச்சி காலமாக கொண்ட தேசிய சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 6.8 ஆகும். இந்த திட்டத்தில் தொகை 10.59 வருடத்தில் இரட்டிப்பாகும்.
டைம் டெபாசிட் திட்டம்
இவற்றில் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வட்டியை அரசு நிர்ணயித்து இருக்கிறது. 1-3 வருட கால டெபாசிட் திட்டத்தில் 5.5 % வட்டி கிடைக்கிறது. இதில் நம் பணம் இரட்டிப்பாக 13 வருடங்கள் காலம் ஆகும். 5 வருட திட்டத்துக்கு 6.7 % வட்டி விகிதமும், முதலீட்டு பணம் 11.5 வருடங்களில் இரட்டிப்பாகிவிடும்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டம்
இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 5.8 ஆக இருக்கிறது. 12.41 வருடங்களில் உங்களது தொகை இதில் 2 மடங்காக மாறிவிடும்.
சேமிப்பு வங்கி கணக்கு
சேமிப்பு வங்கி கணக்கில் 4 % வட்டி வழங்கப்படுகிறது. இவற்றில் முதலீடு செய்த தொகை 18 வருடங்களில் இரட்டிப்பாகிவிடும்.