Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: ரூ.95 முதலீட்டில் இவ்வளவு லட்சம் கிடைக்குமா?…. இதோ முழு விபரம்….!!!!

இளம்வயதிலேயே பாதுகாப்பான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து விட்டால் எதிர் காலம் குறித்த கவலை உங்களுக்கு இருக்காது. சிறந்த மற்றும் நம்பகத்தன்மை ஆன முதலீட்டு திட்டங்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு போஸ்ட் ஆபிஸின் சேமிப்புத் திட்டமானது உதவிகரமாக இருக்கும். போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறு சேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்களின் வயது குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுவரை இருத்தல் வேண்டும்.

இவை முழுக்க முழுக்க இந்தியக் குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் ஆகும். சிறு சேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூபாய்.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. முதலீட்டாளர் இறந்து விட்டால் காப்பீட்டுத்தொகை குடும்ப உறுப்பினர், நாமினி (அ) சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் 2 வகையான முதிர்வு விருப்பங்கள் இருக்கிறது. முதல் விருப்பமானது 15 வருடம் பாலிசியாகும். இவற்றில் உத்தரவாதத் தொகையில் 20% 6, 9 மற்றும் 12 வருடங்களுக்கு பின் பணத்தை திரும்பபெறலாம். அதேபோல் 2வது விருப்பம் 20 ஆண்டு பாலிசியாகும். இதில் 8, 12 மற்றும் 16 வருடங்களுக்கு பின் பணம் திரும்பப்பெறலாம்.

எடுத்துக்காட்டாக தாங்கள் 20 வயதில் ரூபாய்.7 லட்சம் காப்பீட்டுத்தொகை உடன் 20 ஆண்டு பாலிசியை வாங்கும்போது, ​​தினசரி பிரீமியமாக ரூ.95 செலுத்தவேண்டும். மாதம் ரூ.2850 வரும், அதுவே ஆண்டுக்கு மொத்தம் ரூ.17,100 ஆகும். 20 ஆண்டுகள் இத்தொகையை முதலீடு செய்து அத்திட்டம் முதிர்ச்சி அடையும்போது உங்களுக்கு மொத்தமாக ரூபாய்.14 லட்சம் கிடைக்கும். அதன்பின் ஒவ்வொரு ரூபாய்.1000க்கும் உங்களுக்கு ஆண்டு போனஸ் ரூ.48 வழங்கப்படுகிறது. அதன்படி மொத்த போனஸ் ரூபாய்.6.72 லட்சமாக இருக்கும். அந்த வகையில் கடன் முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு மொத்தம் ரூபாய். 9.52 லட்சம் கிடைக்கும்.

Categories

Tech |