Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் வடிக்கையாளர்களுக்கு…. இனி இந்த வசதியும் வந்துட்டு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தபால் நிலையத்தில் புது விதிமுறையானது நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, தற்போது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு நிதிபரிமாற்றத்தையும் செய்யலாம். NEFT மற்றும் RTGS போன்ற வசதிகள் அஞ்சல் துறை வாயிலாக துவங்கப்பட்டுள்ளது. தபால் நிலையத்தில் NEFT வசதியானது மே 18ம் தேதி முதல் துவங்கப்பட்ட நிலையில், RTGS வசதியும் மே 31ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இனிமேல் தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு RTGS வழியாகவும் பணம் அனுப்பும் வசதியானது கிடைக்கும்.

அத்துடன் மற்ற வங்கிகளைப் போன்றே போஸ்ட் ஆபீஸூம் வாடிக்கையாளர்களின் பிரதான பணப் பரிமாற்றத்துக்கான தளமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா வங்கிகளும் NEFT மற்றும் RTGS வசதிகளை வழங்குகிறது. தற்போது தபால் நிலையமும் இவ்வசதியை வழங்குகிறது. NEFT மற்றும் RTGS வாயிலாக மற்றொரு கணக்கிற்கு பணத்தை அனுப்புவது மிக எளிது. இதன் வாயிலாக விரைவில் பணப்பரிமாற்றம் செய்யலாம். அவர்கள் மின்னணு முறையில் நிதிபரிமாற்றம் செய்யலாம்.

இதற்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கிறது. NEFTல் பணப்பரிமாற்றத்திற்கு வரம்பில்லை. அதே நேரம் RTGSல் நீங்கள் ஒருநேரத்தில் குறைந்தது 2 லட்சம் ரூபாய் அனுப்பவேண்டும். இதற்கு நீங்கள் சில கட்டணங்களை செலுத்த வேண்டும். நீங்கள் NEFT செய்தால், இவற்றில் ரூபாய்.2.50 + ஜிஎஸ்டி ரூபாய்.10 ஆயிரம் வரை செலுத்தவேண்டும். ரூபாய்.10 ஆயிரம் முதல் ரூபாய்.1 லட்சம் வரை ரூ.5 + ஜிஎஸ்டி ஆகும். அதேசமயத்தில் ரூபாய்.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை, ரூ.15 + ஜிஎஸ்டி மற்றும் 2 லட்சத்துக்கு மேல் ரூ.25 + ஜிஎஸ்டி செலுத்தவேண்டும்.

Categories

Tech |