இந்திய அஞ்சல்துறை போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு விபரங்களை தங்கள் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு விபரங்களில் அவர்களது பான் கார்டு எண் மற்றும் அவர்களது மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். தற்பொழுது அனைவருக்கும் தங்களது பணத்தை சேமிக்கும் ஒரு முக்கிய இடமாக போஸ்ட் ஆபீஸ் மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் பணத்திற்கான வட்டி அதோடு அந்த பணத்திற்கு பாதுகாப்பு, அரசு சார்ந்த நல்ல திட்டங்கள், பெண்பிள்ளைகளின் தனி சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளின் சேமிப்பு திட்டம், கணவன் மனைவி ஜாயின்ட் அக்கவுன்ட், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் என அஞ்சல் சேமிப்பு இருக்கும் பல சேமிப்பு திட்டங்கள் பொது மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நீண்டகால அக்கவுண்ட் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும், அனைத்து திட்டங்களின் அக்கவுண்டை முடித்துக் கொள்ளும் போது பாஸ் புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் கணக்கு நிறைவு அறிக்கை வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் கொடுக்கப்படும். இது அனைத்து விதமான கணக்குகளுக்கும் ரூ.50000 அதிகமான பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு இணைக்க வேண்டும். மேலும் ரூ.20,000 மேல் பண பரிவர்த்தனைக்கு மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.