இன்று முதல் தபால் நிலையங்களில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும்.
ஏப்ரல் 1 முதல் முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதனால் தபால் அலுவலகங்களில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை தற்போது தபால் நிலையங்களில் இருந்து சேமிப்புக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. அதாவது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக நிலையான வைப்புத்தொகை போன்றவற்றிற்கான வட்டி தொகை நேரடியாக செலுத்தபடாது. இங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் தபால் கணக்குடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும். அதன்பிறகு வட்டி வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்நிலையில் வட்டி பணத்தை மாதந்தோறும் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை எடுத்துக் கொண்டாலும் இந்த முறை செல்லுபடியாகும். தபால் அலுவலக வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி அல்லது அஞ்சலகத்தில் கணக்கை இணைக்கவில்லை என்றால் புதிய சிக்கல் ஏற்படலாம். எனவே தபால் அலுவலக வாடிக்கையாளர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வங்கி கணக்கை இணைத்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் இருக்கும் வட்டி பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டு டெபாசிட் செய்யப்படும்.
இதன்காரணமாக வட்டி வேறொரு அலுவலக கணக்கிற்கு மாற்றப்படுவதுடன் சேமிப்பு கணக்கு அல்லது காசோலை மூலம் மட்டுமே வட்டியை பெறமுடியும். இதனையடுத்து ஐந்தாண்டு மாத வருமானத் திட்டத்தில் வட்டி மாதந்தோறும் செலுத்தப்படும். 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். டி.டி கணக்கிற்கான வட்டி ஆண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்கள் திட்டம், டெபாசிட் திட்டம், டெர்ம் டெபாசிட் ஆகியவற்றுக்கு வட்டிக்கு வட்டி கிடையாது.