இந்திய மக்கள் தற்போது சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இவர்களுக்கு உதவும் விதமாக அஞ்சல் துறை பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் வட்டி போன்றவை கிடைக்கிறது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக தரக்கூடிய மற்றும் பணத்தை இரட்டிப்பாகும் திட்டங்களை எதிர்பார்க்கின்றார்கள். இவர்களுக்கு தேசிய சேமிப்பு பற்றிய திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் 18 வயது நபர்கள் இணைந்து கொள்ளலாம். மேலும் 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களில் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கிக் கொள்ளலாம். இந்த ஜாயிண்ட் அக்கவுண்டில் மூன்று பேர் வரை இணைத்துக் கொள்ளலாம்.இதில் கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் இறந்துவிட்டால் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இடையில் முடித்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும் இதில் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ஆயிரமாக நிர்ணயம் செய்ய பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து வருடங்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் வருடத்திற்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது. தற்போது வட்டவிகிதம் 6.8 ஆக வழங்கப்பட்டு வருகிறது இதற்கு வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வேறு விளக்கு இருக்கிறது. மேலும் இந்த பத்திரத்தை வைத்து கடன் வசதியும் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒரு வருடத்திற்கு பின் மூன்று வருடங்கள் முடித்துக் கொண்டால் உங்களின் சேமிப்பு கணக்கிற்கு கிடைக்கும் படி மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்லாமல் வருமானவரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி சலுகை உண்டு இந்த சேமிப்பு பத்திர திட்டத்தில் ஐந்து வருடங்களில் 10 லட்சம் முதலீடு செய்தால் 14 லட்சமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.