Categories
அரசியல்

போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. இனி கவலையில்லை…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!

இனி வங்கிகளில் மட்டுமல்லாமல் போஸ்ட் ஆபீஸ் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்று இந்திய தபால் துறை அறிவித்துள்ளது அதாவது NEFT, ஆர்டிஜிஎஸ் மின்னணு பணபரிவர்த்தனை வசதிகளைப் பயன்படுத்தலாம். மே 18ஆம் தேதி முதல் நெப்ட் பரிவர்த்தனை வசதியையும், மே 31-ஆம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் வசதியை பயன்படுத்த முடியும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. போஸ்ட் ஆபிஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு மின்னணு முறையில் பணத்தை அனுப்ப முடியும்.

அதே போல மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஆர்டிஜிஎஸ், நெப்ட் வாயிலாக சேமிப்பு கணக்கிற்கு பணத்தை அனுப்ப முடியும். வருடம் முழுவதும் அனைத்து நாட்களிலும் நெப்ட் (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் வாயிலாக பணத்தை அனுப்ப முடியும். விடுமுறை நாட்களிலும் எந்த தடையும் இல்லாமல் பணத்தை அனுப்பலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |