அஞ்சல் துறையில் பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் தற்போது மக்களும் அதிக அளவில் சேமிப்புத் திட்டங்களில் சேர ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். எந்தவித பயமும் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் சிறந்த நன்மைகளை தருகிறது.
அதன்படி செல்வமகள் சேமிப்பு திட்டம் காப்பீடு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து வருங்கால வைப்பு நிதி திட்டமும் உள்ளது. இந்த திட்டம் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தருகிறது. இந்தத் திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். தினமும் 417 ரூபாய் சேமிப்பதன் மூலம் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்து ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். இந்த சேமிப்பு 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும்.
தொடர்ந்து இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீட்டு தொகைக்கு 7.1% படி 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இவை சேர்ந்து 40.68 லட்சம் ரூபாய் முதிர்வு காலத்தில் பாலிசிதாரருக்கு கிடைக்கும்.தேவைப்பட்டால் ஒவ்வொரு 5 ஆண்டுகளாக நீங்கள் நீடிக்கலாம். அவ்வாறு நீடித்தால் முதலீடு செய்த மொத்த தொகை 37.50 லட்சமாக இருக்கும். வட்டியுடன் சேர்ந்து 65.68 லட்சம் ரூபாய் கிடைக்கும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மொத்தம் 25 ஆண்டு முதலீடு செய்தால் உங்கள் கைக்கு 1.03 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த பிஎஃப் கணக்கை இந்தியாவில் யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். இந்த சேமிப்பு கணக்கில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதி கிடையாது. அஞ்சலகத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்க அடையாள சான்று, முகவரி சான்று, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.