Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் ரூபாய் 1000 போடுங்க….. 18 லட்சம் லாபத்தை அள்ளிட்டு வாங்க….. அருமையான திட்டம்….!!!!

லட்சக்கணக்கில் லாபம் அள்ளித்தரும் சிறுசேமிப்பு திட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

1000 ரூபாய் முதலீட்டில் 18 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படி பாதுகாப்பான முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரிஸ்க் எடுக்க விரும்புவோர் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் பணத்தை போடுவார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். அதன்படி பொது வருங்கால வைப்பு நிதி ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் லாபத்துக்கு உத்தரவாதம் உண்டு. இதில் சரியான முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் இதில் முதலீடு செய்யலாம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் மெச்சூரிட்டி காலம் கிடைக்கின்றது. அதன் பின்பு 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் வரை நீடித்துக் கொள்ள முடியும். மெச்சூரிட்டியின்போது மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வந்தால் நீங்கள் டெபாசிட் செய்த தொகை 1.80 லட்சம் ரூபாய் மற்றும் இதற்கு வட்டி 7.1% கிடைத்தால் 1.45 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

15 ஆண்டு இறுதியில் மொத்தமாக 3.25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். 25 ஆண்டு வரை நீடித்தால் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். 30 ஆண்டு வரை நீடித்தால் 12 லட்சம் வருமானம்,   35 ஆண்டு நீடித்தால் 18 லட்சம் வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய விரும்புவோர் தபால் அலுவலகம் வாயிலாக கணக்கில் தொடங்கி முதலீடு செய்யலாம்.

Categories

Tech |