Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் இன் சூப்பரான திட்டம்… ரூ.7000 முதலீடு செய்து ரூ. 5 லட்சம் வாங்கலாம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!!!

சேமிப்பு என்பது நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்றாகும். வீட்டில் நாம் எவ்வளவு பணத்தை சேமித்து வைக்கின்றோமோ அவ்வளவு தொகை மட்டும் தான் நமக்கு கிடைக்கும். அதே நேரம் ஏதேனும் முதலீடு திட்டங்களில் நாம் பணத்தை முதலீடு செய்து கொள்ளும்போது நமக்கு நாம் முதலீடு செய்த பணத்துடன் சேர்ந்து அதற்கான வட்டியும் என ஒரு பெரிய தொகை கிடைக்கிறது. ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் பாதுகாப்பானதா நமது பணத்திற்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடுமா என்பதை ஆராய்ச்சி செய்து அதன் பின் முதலீடு செய்வது முக்கியமாகும். அதுவே அரசின் கீழ் இயங்கும் போஸ்ட் ஆபீசின் திட்டத்தில் முதலீடு செய்வது லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ் இன் ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்யும் பொழுது உங்கள் பணத்திற்கு சிறந்த வட்டி விகிதம் கிடைக்கிறது.

மேலும் இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் முதலீடு செய்வதற்கான அதிகப்பட்ச வயது வரம்பு என எதுவும் கிடையாது. மேலும் இந்த கணக்கின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இருப்பினும் வங்கி ஆறு மாதங்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்கள், மூன்று வருடங்கள் என தொடர் வைப்பு கணக்கு வசதி வழங்கி வருகின்றது. இதில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் உங்கள் கையில் டெபாசிட் செய்யப்படுகிறது.  போஸ்ட் ஆபீஸ் இன் இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு நிறுவனம் 5.8% வட்டி விகிதங்களில் வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆபீஸ் இன் இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் 7174 என ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் ஐந்து வருடங்களின் முடிவில் உங்களுக்கு 5.8 சதவீத வட்டி விகிதத்தில் 5 லட்சத்திற்கும் மேல் கிடைக்கிறது. இந்திய அரசு அதன் அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயம் செய்கிறது.

Categories

Tech |