Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்…. கொட்டிக்கிடக்கும் பணம்….ரூ.35 லட்சம் வரை….!!!!!!

பொது மக்களின் சேமிப்பு பழக்கங்களை ஊக்குவிப்பதற்காக அதிகமான சேமிப்பு திட்டங்களை தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் அதிக லாபம் கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கே சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கின்றது. மேலும் அரசின் உத்தரவாதமும் இருக்கின்றது. இந்த நிலையில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் நிறைய இருக்கின்றது. அதில்  மிகவும் முக்கியமான ஒன்று கிராம் சுரக்ஷா யோஜனா.

இந்தத் திட்டம் குறைந்த முதலீட்டு தொகையில் அதிக ரிட்டன் தருகின்றது. மேலும் ஒவ்வொரு மாதமும் 1411 ரூபாய் செலுத்தினால் முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம். மேலும் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ரூபாய் 10,000 முதல் ரூபாய் 10 லட்சம் வரை முதலீடு செய்துகொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்த வேண்டும் காலாண்டு அரையாண்டு வருடாந்திர அளவிலும் பிரீமியம் செலுத்தி கொள்ளலாம்.

இந்த நிலையில் 19 வயதுடைய ஒருவர் இந்தத் திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் முதலீடு செய்தால் அவரது 55 ஆவது வயதில் ரூபாய் 31.60 லட்சம் திரும்ப கிடைக்கின்றது. இதற்கு அவர் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,515 ரூபாய் பிரீமியம் செலுத்தவேண்டும். அதேபோன்று 58 வயது வரை முதலீடு செய்வதாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,463 ரூபாயும், 60 வயது வரை ரூபாய் 1,411 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் கடன் வாங்கும் வசதியும் இருக்கின்றது. நான்கு ஆண்டுகள் முதலீடு செய்த பின் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். பிரீமியம் செலுத்துவதற்கு  30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

Categories

Tech |