Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ்…. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்…. இதுல இவளோ நன்மைகளா?…. சூப்பர் தகவல்….!!!

அஞ்சல் துறையில் மொபைல்  பங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ் பேமென்ட் வங்கி மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக நெட் பேங்கிங் சேவையை பயனாளிகள் தொடர்ந்து கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் ஜீரோ பேலன்ஸ் கணக்கும் தொடங்கிக் கொள்ளலாம். நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே பிபிஎஃப் சேமிப்பு, தபால் நிலையத்தில் தொடங்கப்படும் சில நிரந்தர வைப்பு தொகை கணக்கு ,சிறுசேமிப்புகள் என அனைத்தையும் தொடங்கலாம். அதோடு வீட்டிலிருந்தபடியே நமது சேமிப்பு கணக்கை முடித்துக் கொள்ளலாம். இந்த சேவையை எவ்வாறு தொடங்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முதலாவதாக ippb mobile banking ஆப்பை போனில் டவுன்லோட் செய்ய வேண்டும்.தற்போது ippb mobile banking செயலியை open செய்து OPEN YOUR ACCOUNT NOW என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.இதில் கேட்கப்படும் மொபைல் நம்பர் மற்றும் பான் கார்டு நம்பரை பதிவு செய்யவும். அடுத்ததாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை டைப் செய்து submit என்பதை கொடுக்கவும்.
இதனைத்தொடர்ந்து முகவரி உள்ளிட்ட விபரங்களை நிரப்ப வேண்டும் பின்னர் கண்டினியூ ஆப்ஷனை கிளிக் செய்யவும். தொடர்ந்து உங்களுக்கு ஒரு OTP என் வரும் அந்த எண்ணை டைப் செய்து அனுப்பவும் இதனைத் தொடர்ந்து ஜீரோ பலன்ஸ் சேவை தொடங்கப்படும்.

Categories

Tech |