Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபீஸ் ன் இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்”… உடனே ஜாயின் பண்ணுங்க… முழு விவரம் இதோ…!!!!!

இந்தியாவில் அதிகமான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள். ஏனென்றால் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத பாதுகாப்பான முதலீட்டையும் லாபத்தையும் வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் வட்டி விகிதங்களும் அதிகமாக இருக்கிறது தற்போது அஞ்சலகத்தில் புதன் வருங்கால வைப்பு நிதி செல்வமகள் சேமிப்பு திட்டம் கிராம சுரக்ஷா யோஜனா மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் நல்ல லாபம் தரக்கூடிய மற்றும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுத் திட்டங்களாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து அஞ்சலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் முதலீட்டிற்கு உத்தரவாத வருமானம் அளிக்கக்கூடிய திட்டமாக இருக்கிறது.

இந்த திட்டத்தில் நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் 10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யும்போது வருமான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதன் முதிர்வு காலத்தின் போது முழு தொகையும் வழங்கப்படும் இந்த கிசான் விகாஸ் பத்ராவை அடமானமாகவோ அல்லது பத்திரமாக வைத்து நீங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம் மேலும் இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதியும் இருக்கிறது. இதில் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செலுத்தி தொடங்கிக் கொள்ளலாம் அதிகபட்ச வரம்பு கிடையாது. மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள் அதாவது 10 வருடங்கள் மற்றும் நான்கு மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.

Categories

Tech |