இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே பௌத்த தத்துவத்தை பின்பற்றியே ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
இலங்கையில் 73 வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சமயங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும் புதிய மதிப்பை வழங்கும் அகிம்சை மற்றும் அமைதி பௌத்த தத்துவத்தில் உள்ளது.
மேலும் நாட்டில் இருக்கும் மதங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும் நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்கள் சரிசமமாக சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை இருக்கிறது. நாட்டிற்குரிய தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் நாட்டில் வாழும் பல இனத்தவர்களுக்கு மத்தியில் உரிய நல்லிணக்கத்தை உருவாக்கி, முற்றிலுமாக வறுமையை ஒழித்து, பொருளாதாரத்தை மீட்டு, முன்னேற்றத்தை உண்டாவதற்கான குறிக்கோள் நம்மிடம் இருக்கிறது.
மேலும் நாட்டின் தேசிய மரபுரிமைகள், கலாச்சார பழக்க வழக்கங்கள் தேசிய மற்றும் தேசப்பற்று போன்றவற்றிற்கான அச்சுறுத்தல்கள் கடுமையாக இருக்கும் நிலையில் தேசிய பாதுகாப்பு பலவீனமற்று இருப்பதால் அதனை மீண்டும் உறுதிப்படுத்தி நம்நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களை வெற்றி கொள்ள மக்கள் தனக்கு வாக்களித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஜனநாயக நாடாக இலங்கை உள்ளது. இங்கு வாழும் அனைத்து மக்களும் சம உரிமை பெற்றிருக்கின்றனர். ஆனால் குடிமக்களை இனம் மற்றும் மதம் என்ற பெயரில் பிரிப்பதற்கு முயற்சி செய்வதை நான் ஒழிப்பேன். நான் நீங்கள் கேட்ட தலைவன், என்னிடம் நீங்கள் ஒப்படைத்த அனைத்து பொறுப்புகளையும் குறையின்றி நான் நிறைவேற்றுவேன் என்று தன் உரையை முடிவு செய்தார்.