நடிகர் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மங்காத்தா படத்தில் வரும் அஜித் போல் விஜய் சேதுபதி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.