Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்பா என்ன பந்துடா அது.! தடுமாறி கீழே விழுந்து திகைத்து போன ஸ்மித்…. யார்க்கர் கிங் பும்ராவின் அட்டாக் வீடியோ…!!

ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பும்ரா ஒரு அற்புதமான யார்க்கரை ஸ்டீவ் ஸ்மித்துக்கு வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது.. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால்  VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்பின் ஆடிய  ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 90/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 (20) ரன்களும், பிஞ்ச் 31 ரன்களும்  எடுத்தனர். பின்னர் ஆடிய இந்தியா 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. ரோஹித் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இந்த ஆண்டு ஜூலை தொடக்கத்தில் இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த பின்னர் முதல் முறையாக ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்குள் திரும்பினார். முதன்மை வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக நடந்து முடிந்த 2022 ஆசிய கோப்பையில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் மொஹாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் நாக்பூரில் நேற்று நடந்த போட்டியில் ஆரோன் ஃபிஞ்சை ஒரு அற்புதமான யார்க்கர் பந்து வீச்சால் பும்ரா ஆட்டமிழக்க செய்தார்..

அதுமட்டுமில்லாமல் பும்ரா ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித்தை இதே போன்ற யார்க்கரால் தொந்தரவு செய்தார்.. ஸ்மித் அந்த பந்தை எதிர்கொண்டபோது கால் தடுமாறி கீழே விழுந்தார்.. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.. அவர் (ஸ்மித்) ஆட்டமிழக்கவில்லை என்றாலும்,  ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் பிஞ்ச் யார்க்கரால் ஆட்டமிழந்தார்.. பிஞ்ச் ஆட்டமிழந்த பின் பேட்டால் கைதட்டி பாராட்டுவது போல பும்ராவை நோக்கி தலையை அசைத்தார்.. பிஞ்ச் செய்த செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.. இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

முன்னதாக, அக்சர் படேல் 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஒரு நட்சத்திரமாக செயல்பட்டார். புவனேஷ்வர் குமார் இந்த ஆட்டத்தில் விளையாடும் லெவன் அணியில் இடம்பெறாமல் இருந்தார். ஒருவேளை ஓவர் குறைக்கப்பட்டதால் அதிக பவர்-ஹிட்டர் பேட்டர்கள் தேவை என்ற காரணத்தால் அவர் இடம் பிடிக்காமல் இருக்கலாம்.

ரன் சேஸிங்கில், ரோஹித் ஒரு முனையில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்து ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் கார்த்திக் கடைசி ஓவரில் கேமியோவில் விளையாடி டேனியல் சாம்ஸுக்கு எதிராக 2 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி  ஐதராபாத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

https://twitter.com/Suryakumar_club/status/1573352668675948544

Categories

Tech |